10 கிலோ ஆடு ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை


10 கிலோ ஆடு ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 31 Aug 2021 9:27 PM IST (Updated: 31 Aug 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

10 கிலோ ஆடு ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை

குன்னத்தூர், 
குன்னத்தூர் சந்தை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தை ஆகும். இது வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும். குன்னத்தூர் பகுதியில் காடுகள் அதிகம் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் ஆடு ,மாடுகள் அதிகம் வளர்த்து வருகிறார்கள். குன்னத்தூர் சந்தைக்கு உள்ளூர் பகுதி ஆடுகள் மட்டுமின்றி ஈரோடு, கோபி, பவானி, மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதேபோல் குன்னத்தூர் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். கொரோனோ பரவல் காரணமாக சந்தை கூடாமல் இருந்தது. தற்போது 4 வாரங்களாக தான் சந்தை கூடுகிறது. குன்னத்தூர் சந்தைக்கு வெளிமாவட்ட வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு குறைவாக வந்தபோதிலும் வியாபாரிகள் ஆடுகள் வாங்க அதிகளவு வருகை தந்துள்ளார்கள். ஆகவே 10 கிலோ எடைகொண்ட வெள்ளாடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை உயர்ந்து காணப்பட்டது.

Next Story