தூய்மை இந்தியா திட்டத்தில் இருந்து பணி நீக்கம் செய்ததாக ஒப்பந்த ஊழியர்கள் புகார்
தூய்மை இந்தியா திட்டத்தில் இருந்து பணி நீக்கம் செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் புகார் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் சமூக பரப்புரையாளர்களாக பணியாற்றியவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை இந்தியா திட்டத்தின் சமூக பரப்புரையாளர்களாக பணியாற்றி வந்தோம். கொரோனா காலத்தில் நோயாளிகளை தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டோம்.
அதோடு தனிநபர் இல்ல கழிப்பறைகளை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தூய்மை பணியாளர்கள் குப்பைகள் சேகரிப்பதை மேற்பார்வை செய்தல், கொசுப்புழு ஒழிப்பு, சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு உள்பட பல பணிகளை செய்தோம்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களை பணிநீக்கம் செய்து விட்டனர். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே 3 மாத சம்பளம் மற்றும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story