தாராபுரம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தாராபுரம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
x
தினத்தந்தி 31 Aug 2021 9:32 PM IST (Updated: 31 Aug 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தாராபுரம், 
 தாராபுரம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள்
 தாராபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கடைகள் முழுவதும் ஏலம் விடப்பட்டது. அதனை ஏலம் எடுத்த நபர்கள் பலகாரம், டீ கடைகள், பழவகை விற்பனை கடைகளை நடத்தி வருகின்றனர்.
 அவர்கள் கடைகளை அனுமதித்த இடத்தைவிட கூடுதலாக பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வந்ததால் பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. இந்நிலையில் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். 
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அதனடிப்படையில் நகராட்சி ஆணையாளர் சங்கர் உத்தரவின்பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்களைக் கொண்டு பஸ் நிலையம் முழுவதும் உள்ள கடைக்காரர்களின் ஆக்கிரமித்து வைத்துள்ள பொருட்களை அகற்றினர். இதேபோன்று பஸ் நிலையத்தில் உள்ள வழித்தடத்தில் இருபுறமும் நடைபாதை வியாபாரிகள் பல ஆண்டு காலமாக நகராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்தாமல் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அவைகள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதால் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட நடைபாதை கடைகளை இனிமேல் வைக்கக்கூடாது என அவர்களை எச்சரித்து விட்டு  சென்றனர்.

Next Story