தூத்துக்குடியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்


தூத்துக்குடியில் சட்டவிரோத செயல்களில்  ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 Aug 2021 4:22 PM GMT (Updated: 31 Aug 2021 4:22 PM GMT)

தூத்துக்குடியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
அறிவுரை கூட்டம்
தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றம் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்சப்-இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், போலீஸ் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், குற்றவாளிகளை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல்
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:- 
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்றவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும், அதே போன்று ரவுடித்தனம் செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக வெடி பொருட்கள் வைத்திருப்பவர்கள் என எந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
போலீஸ் நிலைய பணிகளை சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும். போலீஸ் பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் போலீசாரின் செயல்பாடுகள் இருக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story