தர்மபுரி நகைக்கடையில் 20 பவுன் நகைகள் கையாடல் கேசியர் உள்பட 2 பேர் கைது


தர்மபுரி நகைக்கடையில் 20 பவுன் நகைகள் கையாடல் கேசியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 10:14 PM IST (Updated: 31 Aug 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் உள்ள ஒரு நகைக்கடையில் 20 பவுன் நகைகள் கையாடல் செய்த கேசியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரி,


தர்மபுரி டவுன் பைபாஸ் ரோட்டில் நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகைக் கடையில் தினந்தோறும் இரவு நகைகள் இருப்பு சரிபார்க்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 27-ந் தேதி இரவு கடையில் இருந்த நகைகள் இருப்பு சரி பார்க்கப்பட்டது. அப்போது செயின்கள் பிரிவில் 5 செயின்கள் (20 பவுன்) இருப்பு குறைவாக இருந்தது.

இதுதொடர்பாக கடையின் மேலாளர் சுரேஷ் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அந்த கடைக்கு சென்று கடையில் பணிபுரியும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். 

2 பேர் கைது

அப்போது கடையில் பணிபுரியும் கேசியர், ஒட்டப்பட்டி செம்மனஅள்ளி சேர்ந்த மாரியப்பன் (வயது27), பாப்பாரப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த ஆனந்தபாபு (24) ஆகிய 2 பேரும் அந்த நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 பவுன் (5 செயின்கள்) நகைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story