தாராபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தாராபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவருக்கும்  ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
x
தினத்தந்தி 31 Aug 2021 10:17 PM IST (Updated: 31 Aug 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தாராபுரம்,  
தாராபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவருக்கும்  ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.  
தொழிலாளி கொலை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 33).  இவருடைய மனைவி ராதாமணி (28). இவர்கள் இருவரும் காங்கேயத்தில் உள்ள ஒரு தேங்காய் பருப்பு விற்பனை நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அதே நிறுவனத்தில் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த சேகர் (35) என்பவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 
இவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால், சேகருக்கும்.  ராதாமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளத்தொடர்பு 2 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ராதாமணியின் கள்ளத்தொடர்பு அவருடைய  கணவர் மனோகருக்கு தெரியவந்தது. இதையடுத்து சேகருடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு  மனைவி ராதாமணிக்கு மனோகர் அறிவுரை கூறினார்.
உல்லாசம்
ஆனாலும்  ராதாமணி -சேகர் இருவரும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. அதன்பின்னர் அடிக்கடி தனிமையில் இருவரும் சந்தித்து  உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதலன் சேகரின் அரவணைப்பில் இதம்கண்ட ராதாமணிக்கு தனது கணவர் மேல் வெறுப்பு  ஏற்பட்டது. கணவர் உயிரோடு இருந்தால், கள்ளக்காதலனோடு சேரமுடியாது என்று எண்ணிய ராதாமணி தனது கள்ளக்காதலன் சேகரோடு சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி பணி முடிந்து காங்கேயம்- சென்னிமலை ரோட்டில்  மொபட்டில் மனோகர் வந்து கொண்டிருந்தார்.
வெள்ளக்காடு பகுதியில் வந்த மனோகரை அவருடைய மனைவி ராதாமணி, ராதாமணியின்  கள்ளக்காதலன் சேகர் ஆகிய இருவரும் சேர்ந்து இரும்பு கம்பி மட்டும் இரும்பு ராடு ஆகியவற்றில் தாக்கி விட்டு  தலைமறைவாகினர். சம்பவ இடத்திலேயே மனோகர் துடிதுடித்து இறந்தார். இ்ந்த கொலை தொடர்பாக  காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து கணவரை கொலை செய்த வழக்கில் ராதாமணி மற்றும் சேகர் இருவரையும் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இவர்கள் மீதான கொலை வழக்கு  தாராபுரம் 3-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ராதாமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும்,  அவருடைய கள்ளக்காதலன் சேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் என்.ஆனந்தன் ஆஜராகி வாதாடினார்.  

Next Story