வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஊட்டி
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு செய்தார்.
இதன்படி, தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குந்தசப்பையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.20.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, 270 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி, குந்தசப்பை முதல் கம்பிக்கல் வரை 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் போடப்பட்ட கான்கிரீட் சாலை,
தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேரார் முதல் தும்மனட்டி வரை மேம்படுத்தப்பட்ட சாலை, கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டுமந்து கிராமத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலை, கலிங்கனட்டி கிராமத்தில் ரூ.10.57 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலை ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story