விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
பரமக்குடி,
பரமக்குடி சுந்தர்நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தாராம். இவரது மகன் ராம் பிரபு (வயது26). திருமணம் ஆகவில்லை. இவர் நான்கு முறை அரசு தகுதித் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் ராம் பிரபு வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story