1437 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்
ஒட்டன்சத்திரத்தில் 1,437 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
ஒட்டன்சத்திரம் செப்.1-
ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் கிராம பகுதியில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 1,437 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் 210 இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை தாங்கி ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி பேசினார். கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரப்பலாறு அணையை தூர்வார டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு குளிர்சாதன கிட்டங்கி அமைப்பதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல எண்ணற்ற திட்டங்களை செய்ய உள்ளோம், வரும் காலங்களில் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி, தாசில்தார் முத்துசாமி, தி.மு.க. நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் தருமராஜன், ஜோதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டியராஜன், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர்கள் அய்யம்மாள், சத்ய புவனா மற்றும் தி.மு.க.நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story