இளம் பெண் கட்டாய திருமணம் 3 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது


இளம் பெண் கட்டாய திருமணம் 3 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 11:15 PM IST (Updated: 31 Aug 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே இளம் பெண் கட்டாய திருமணம் 3 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை அதே வயதுடை வாலிபர் கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி கட்டாய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணையும், வாலிபரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் பிரிவு சாலையில் உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்ட போலீசார் மலைக்கோட்டாலம் கிராமத்தில் பதுங்கி இருந்த வாலிபர் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த கோவிந்தன் மகன் சுபாஷ்(20), ரமேஷ் மகன் வெற்றிவேல்(19) ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story