பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்
பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இங்கு வெளிமாநிலங்களில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வருகின்றன.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வாரச்சந்தை நடந்தது. அதிக அளவில் கறவை மாடுகளும் மற்ற கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதில் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையானது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஆங்காங்கே தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டன. அதனையும் மீறி பொதுமக்கள் கூடினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பல மாதங்களுக்கு பிறகு அண்டை மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் விதவிதமான கறவை மாடுகளும் எருதுகளும் சந்தைக்கு வந்தன. ஒரு கறவை மாடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரைக்கும், எருதுகள் ஒரு ஜோடி ரூ.1 லட்சத்திற்கு மேல் விற்பனையானது. இதனால் இந்த வாரம் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்திருக்கும் என கூறினர்.
Related Tags :
Next Story