தீக்குளித்து இளம்பெண் தற்கொலை; 5 பேர் கைது


தீக்குளித்து இளம்பெண் தற்கொலை; 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 11:21 PM IST (Updated: 31 Aug 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தாய், மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி

வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தாய், மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

கணவரை பிரிந்து

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் காசிவேல். இவரது மனைவி குப்பு (வயது 60). இவர்களுக்கு சித்ரா, சுமதி, குணா, பாரதி, சங்கீதா ஆகிய 5 மகள்கள் உள்ளனர். 

இதில் சங்கீதா மற்றும் பாரதி ஆகிய இருவரும் அவர்களின் கணவர்களுடன் ஏற்பட்ட கருகத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டில் உள்ளனர். சங்கீதா கடையில் வேலை செய்து வந்தார்.

இரவில் சில நாட்கள் கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து வந்து வீட்டில் விட்டுள்ளார்.

தீக்குளித்து தற்கொலை

அதேபோல் கடந்த 22-ந்தேதி இரவு 9 மணி அளவில் கடை ஊழியர் அழைத்து வந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த கணபதி (20), பிரபு (23), விஜி (21) மற்றொரு வாலிபர் ஒருவர் ஆகியோர், கடை ஊழியரை வழிமறித்து, தகராறு செய்து சங்கீதாவையும், பாரதியையும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து இருவரும் கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் முறையிட்டுள்ளனர். அதன்படி 4 பேரையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் கிராம மக்கள் கண்டித்துள்ளனர். 

இதனால் வாலிபரின் தாய் எல்லம்மாள், பாரதி வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது பாரதி அடுப்பில் எரிந்து கொண்டிகுந்த விறகு கட்டையை எடுத்து உடலில் தீ வைத்துக்கொண்டாராம். 

இதில் உடல் முழுவதும் பற்றிய தீயால் பாரதி அலறி துடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மகுத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 
5 பேர் கைது

இதுகுறித்து பாரதியின் சகோதரி சித்ரா வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து பாரதியை தற்கொலைக்கு தூண்டியதாக எல்லமமாள், அவரது மகன் 18 வாலிபர் மற்றும் பிரபு, கணபதி, விஜி ஆகிய 5 பேரையும் கைது செய்தார். 

Next Story