கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2021 5:53 PM GMT (Updated: 2021-08-31T23:23:51+05:30)

கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொருளாளர் சாந்தி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் வேலு, கார்த்தி, துணை செயலாளர் அஞ்சலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆறுமுகம், மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டையை உடனடியாக வழங்க வேண்டும், தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும், அரசாணையின் படி ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.  இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.  


Next Story