நாமக்கல் மாவட்டத்தில் ரூ.3¼ லட்சம் விதைகள் விற்பனைக்கு தடை-துணை இயக்குனர் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் ரூ.3¼ லட்சம் விதைகள் விற்பனைக்கு தடை-துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 1 Sept 2021 12:53 AM IST (Updated: 1 Sept 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக விதை ஆய்வு துணை இயக்குனர் சண்முகம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்:
அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நெல், பருத்தி, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் விதைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விதை ஆய்வாளர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதை விற்பனை நிலையங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர். 
மேலும் விதை மாதிரிகள் எடுத்து அதை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றனர். விதை பரிசோதனையில் முளைப்பு திறன் குறைவாக இருந்தால், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விற்பனைக்கு தடை
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி விற்பனை செய்யப்பட்ட 839 கிலோ எடையுள்ள ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள விதைகள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விதை ஆய்வு துணை இயக்குனர் சண்முகம் தெரிவித்தார்.
விதை விற்பனையாளர்கள் அனைவரும் அனைத்து பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு முறையான ரசீதுகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Next Story