மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல்


மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 1 Sept 2021 2:09 AM IST (Updated: 1 Sept 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

அன்னவாசல்
 இலுப்பூர் ஜீவா நகர் பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பறக்கும்படை அதிகாரி ரமேஷ் தலைமையிலான அலுவலர்கள் இலுப்பூர் ஜீவாநகர் பகுதியில் சோதனை மேற் காண்டனர். அப்போது பெரியசாமி என்பவரது வீட்டில் விற்பனைக்காக மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story