கிணற்றில் தவறி விழுந்த கபடி வீரர் சாவு


கிணற்றில் தவறி விழுந்த கபடி வீரர் சாவு
x
தினத்தந்தி 1 Sept 2021 2:19 AM IST (Updated: 1 Sept 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த கபடி வீரர் உயிரிழந்தார்

அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த மலைக்குடிப்பட்டி அருகே உள்ள கருத்தன்கால்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பிச்சைமணி (வயது 23). கபடி வீரரான இவர் நேற்று காலை மலைக்குடிபட்டி அரசு மேல் நிலைப்பள்ளிக்கு பின்புறம் உள்ள கிணற்றின் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்ததில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 2 மணி நேர போராடி பிச்சைமணியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை இலுப்பூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story