ஒரே நாளில் 6,010 பேருக்கு தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6,010 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 20 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்றும் மாவட்டத்தில் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 163 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,062 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று மாவட்டத்தில் 6,010 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story