குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை


குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 31 Aug 2021 8:54 PM GMT (Updated: 31 Aug 2021 8:54 PM GMT)

குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள், பள்ளி பருவம் வந்தும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நேற்று வரை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு துறை அலுவலர்கள் ஒன்றாக சேர்ந்து வணிக வளாகங்கள், மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா? என்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் நேற்று தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா? என்று அனைவருக்கும் கல்வித்திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் மோகன், ஆசிரியர் பயிற்றுனர்கள் கண்ணதாசன், சுந்தரவள்ளி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார மேற்பார்வையாளர் தமயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் கார்த்திகேயன், தலைமை காவலர் ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் தா.பழூர் ஒன்றியம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் யாரும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story