போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2021 2:28 AM IST (Updated: 1 Sept 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையை கண்டித்து நேற்று அதிகாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் அதிகாலை 4 மணி அளவில் வண்ணார்பேட்டை தாமிரபரணி போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. நிர்வாகி தர்மன் தலைமையில் பணிமனை வாசலை மூடி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வண்ணார்பேட்டை விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறவழிச்சாலை பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. செயலாளர் ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை நேரத்தில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story