தனியார் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி அருகே கடன் தவணை தொகையை கட்ட வலியுறுத்திதனியார்வங்கிஊழியர்கள்அவமானப்படுத்தியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜீயபுரம், செப்.1-
திருச்சி அருகே கடன் தவணை தொகையை கட்ட வலியுறுத்திதனியார்வங்கிஊழியர்கள்அவமானப்படுத்தியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி
திருச்சி மாவட்டம் குழுமணி அருகே உள்ள பேரூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 75). விவசாயி. இவரது மனைவி ஜெயலெட்சுமி (60). இந்த தம்பதிக்கு வெங்கடேஷ், சுரேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மருதமுத்து திருச்சி உறையூர் பகுதியில் உள்ள இகோடாஸ் வங்கியில் கடந்த 2017-ம் ஆண்டு விவசாய நிலத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் இதற்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் தவணை தொகை கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மருதமுத்து விவசாய வேலையின்றி சாப்பாட்டுக்கு கூட வழியின்றி சிரமம் அடைந்து வந்தார்.
தற்கொலை
இதனால் வாங்கிய கடனுக்கு தவணைத்தொகை கடந்த 2 மாதமாக கட்டவில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் மருதமுத்து வீட்டுக்கு வந்த வங்கி ஊழியர்கள் மாத கடைசி என்பதால் தவணை தொகையை கட்ட வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவரால் பணம் கட்ட முடியாததால் வங்கி ஊழியர்கள் அவரை அவதூறாக பேசி அவமானப்படுத்தினார்களாம்.
அதுமட்டுமின்றி வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு தவணை பணத்தை தந்தால்தான் செல்வோம் என கூறி அங்கேயே அமர்ந்து கொண்டனர். இதனால் அவமானம் அடைந்த மருதமுத்து வீட்டின் கதவை சாத்திக்கொண்டு மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசில் புகார்
இதற்கிடையில் உறவினர்கள் அங்கு வந்தனர், கதவு உள்பக்கமாக பூட்டி கிடந்ததால், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, மருதமுத்து தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதைகண்ட வங்கி ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மருதமுத்துவின் மகன் வெங்கடேஷ் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தவணை தொகையை கட்ட சொல்லி வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் மருதமுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story