அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2021 9:24 PM GMT (Updated: 2021-09-01T02:54:45+05:30)

போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்,
மத்திய அரசு நிதி திரட்டல் என்ற பெயரில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதை கண்டித்து விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினரும் நேற்று அதிகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. மாவட்ட குழுச்செயலாளர் மாடசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மூர்த்தி ,ஐ.என்.டி.யூ.சி. மாரீஸ்வரன், சி.ஐ.டி.யு. பாண்டி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப்.கிளை தலைவர் வைரமுத்து தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கோஷம் எழுப்பினார்கள்.


Next Story