108 தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டம்


108 தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2021 3:03 AM IST (Updated: 1 Sept 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கும்பகோணத்தில் 108 தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம்;
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி  கும்பகோணத்தில் 108 தேங்காய்களை உடைத்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கும்பகோணத்தில் உச்சிப்பிள்ளையார் கோவில் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். 
ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யவும் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா மாவட்ட பொது செயலாளர் குட்டி சிவகுமார், அகில பாரத இந்து ஆன்மிக பேரவை இளைஞர் அணி பொதுச் செயலாளர் கண்ணன், அகில பாரத இந்து மகா சபா தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரகாஷ், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் செந்தில் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story