ஆக்கிரமித்து கட்டப்பட்ட 16 வீடுகள் இடிப்பு
கும்பகோணம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி தெற்கு தெரு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளாக சிலர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
16 வீடுகள் இடிப்பு
ஆனால் சம்பந்தப்பட்ட நபர்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றாமல் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் இளையராஜா உத்தரவின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று காலை பெருமாண்டி தெற்கு தெரு பகுதியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 16 வீடுகளையும் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் விஜயகுமார் மேற்பார்வையில் மின் வாரிய ஊழியர்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்பகளை அகற்றும் பணியையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story