தோட்டத்தில் பிணமாக கிடந்த காவலாளி
கடையநல்லூர் அருகே தோட்டத்தில் காவலாளி பிணமாக கிடந்தார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமம் புதுமனை தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 65). விவசாயியான இவர் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் தனியார் தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் சுடலையின் உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு மோட்டார் பம்புசெட் அறையில் சுடலை பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி போலீசார், சுடலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story