அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,

விருதுநகர்
சென்னையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இனைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட இதர அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து விருதுநகரில் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்திற்கு வந்தனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமையில் பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச்செயலாளர் கலாநிதி, நகர செயலாளர் முகம்மது நயினார், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கே.கே.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.காரியாபட்டி
காரியாபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வீரசோழன் கிராமத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமையிலும், ஏ.முக்குளம் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் கலாவதி சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, புல்வாய்க்கரை கூட்டுறவு வங்கி தலைவர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சுழியில் திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சித்திக், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மகாமூர்த்தி, திருச்சுழி நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், இளைஞர் அணி ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், கு.குறிஞ்சிமுருகன், நகர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியம், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, தெற்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி, முன்னாள் நகர செயலாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமையில் கிளை கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் நகர செயலாளர் ராணா பாஸ்கர்ராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் குருசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் ஆர்56 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வனராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் துரை முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 50 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
---------

Related Tags :
Next Story