ஆத்தூரில் கன்டெய்னர் லாரி மோதி எம்.ஜி.ஆர். சிலை சேதம்


ஆத்தூரில் கன்டெய்னர் லாரி மோதி எம்.ஜி.ஆர். சிலை சேதம்
x
தினத்தந்தி 1 Sept 2021 4:10 AM IST (Updated: 1 Sept 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் கன்டெய்னர் லாரி மோதி எம்.ஜி.ஆர். சிலை சேதம் அடைந்தது.

ஆத்தூர்:
ஆத்தூர் பஸ் நிலையம் அருகே 3 ரோடு சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை கடந்த 25 ஆண்டுகளாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த வழியாக சென்ற ஒரு கன்டெய்னர் லாரி சிலையின் பீடத்தின் மீது மோதியது. பின்னர் அந்த அதிர்வில் எம்.ஜி.ஆர். சிலையின் கை உடைந்து சேதமடைந்தது. மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் தனது காரில் அந்த வழியாக சென்றார். 
எம்.ஜி.ஆர். சிலை சேதமடைந்ததை கண்டதும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்லாமல் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது தலைமையில் அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரன் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து போலீசார், அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்த போது, அதில் கன்டெய்னர் லாரி ஒன்று சிலை மீது மோதியது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற கன்டெய்னர் லாரியை  தேடி வருகிறார்கள்.

Next Story