சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 52 பேர் பாதிப்பு-முதியவர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 52 பேர் பாதிக்கப்பட்டனர். முதியவர் ஒருவர் பலியானார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 52 பேர் பாதிக்கப்பட்டனர். முதியவர் ஒருவர் பலியானார்.
கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 54 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17 பேர், சேலம் ஒன்றியத்தில் 24 பேர், ஆத்தூர் பகுதியில் 4 பேர், நகராட்சி பகுதிகளில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாமக்கல் மற்றும் ஈரோட்டில் இருந்து சேலம் வந்த தலா 2 பேர், தர்மபுரியில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் 96 ஆயிரத்து 129 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 85 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.
முதியவர் பலி
818 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,631 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story