வீட்டில் 24 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது


வீட்டில் 24 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது
x
தினத்தந்தி 1 Sept 2021 4:32 AM IST (Updated: 1 Sept 2021 4:32 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே வீட்டில் 24 கிலோ கஞ்சா பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மேச்சேரி:
மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 55). இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்து 24 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வீட்டில் கஞ்சா பதுக்கியதாக பூங்கொடியை போலீசார் கைது செய்தனர்.

Next Story