திருச்செந்தூரில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 23 பேர் கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 23 பேர் கைது
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அதே இடத்தில் அமர்ந்தனர். அனால் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் திருவள்ளுவன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி உள்பட 17 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பொருளாளர் பால்வனவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 23 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story