கோவில்பட்டி-உடன்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.வினர் 29 பேர் மீது வழக்கு
அ.தி.மு.க.வினர் 29 பேர் மீது வழக்கு
கோவில்பட்டி:
ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கோவில்பட்டியில் தடையை மீறி அ.தி.மு.க. நகரச்செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுதொடர்பாக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், 144 தடை உத்தரவை மீறியதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் கோவில்பட்டி மேற்கு போலீசார் நகர அ.தி.மு.க. செயலாளர் உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று உடன்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமோதரன் உள்பட 15 அ.தி.மு.க.வினர் மீது குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story