கயத்தாறு: சமையல் தொழிலாளி தற்கொலை


கயத்தாறு: சமையல் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 Sept 2021 7:53 PM IST (Updated: 1 Sept 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

சமையல் தொழிலாளி தற்கொலை

கயத்தாறு:
கயத்தாறு அருகே பரிவில்லிக்கோட்டையை ேசர்ந்த ராமர் மகன் பரமசிவம் (வயது 37). இவர் சமையல் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் வயிற்று வலி தாங்காமல் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் மதுவுடன் விஷத்தை குடித்து விட்டு வெளியே வந்துள்ளார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டு, தன்னை காப்பாற்றக்கோரி, தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் விரைந்து சென்று அவரை கயத்தாறிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பரமசிவத்தை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிதிலிப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story