கல்லாபுரம் அருகே உழவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லாபுரம் அருகே உழவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தளி,
கல்லாபுரம் அருகே உழவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மழை தீவிரம்
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாத இறுதியில் அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டதால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் அணையும் அதன் முழு கொள்ளளவை நெருங்கியது.
நடவு பணிகள்
இதையடுத்து கல்லாபுரம்-ராமகுளம் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் நெல் நாற்றங்கால் அமைத்ததுடன் நிலத்தை உழுது பண்படுத்தி சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர். ஒருபுறம் உழவு மறுபுறம் நெல்நாற்று நடவு என சுழற்சி முறையில் பணி நடைபெற்று வருகிறது. டிராக்டர் மூலம் நிலத்தை உழுது மாடுகள் பூட்டிய பரம்பு கொண்டு சமன் செய்து நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதோடு கூலிஆட்களும் வயல்வெளியில் உள்ள வரப்புகளை தண்ணீர் தேங்குவதற்கு ஏதுவாக சீரமைத்து வருகின்றனர். இதனால் வானம் பார்த்த பூமியாக இருந்த அமராவதி, கல்லாபுரம் பகுதி தற்போது எந்திரங்கள், மாடுகள் பூட்டிய கலப்பை, நடவுபணியில் ஆட்கள் என பரபரப்பாக காட்சி அளித்து வருகிறது. அணையும் அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருவதால் விவசாயிகள் உற்சாகத்தோடு நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story