விஷம் குடித்து மாணவி தற்கொலை


விஷம் குடித்து மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 1 Sept 2021 10:17 PM IST (Updated: 1 Sept 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே நாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகள் வைத்தீஸ்வரி(வயது 16). இவர் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  இந்த நிலையில் தனது அக்கா சூர்யாவுக்கு வாங்கி வந்த புத்தாடையை வைத்தீஸ்வரி அணிந்து கொண்டார். இதை அவரது தாய் கங்காதேவி கண்டித்ததால் மனமுடைந்த வைத்தீஸ்வரி விஷம் குடித்தார். இதையடுத்து சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.


Next Story