மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Sep 2021 4:56 PM GMT (Updated: 1 Sep 2021 4:59 PM GMT)

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

ஊட்டி,

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள மண் ஈரப்பதமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் வெயில் அடித்தது. மழை இல்லாமல் இருந்தது. பலத்த காற்று காரணமாக ஊட்டி-மஞ்சூர் சாலை லவ்டேல் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து லவ்டேல் போலீசார் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த மரத்தை துண்டு, துண்டாக வெட்டினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் இருந்து மரம் அப்புறப்படுத்தப்பட்டது. அங்கு ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. மேலும் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story