இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை


இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 1 Sep 2021 4:59 PM GMT (Updated: 2021-09-01T22:29:50+05:30)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

பழனி:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. ஆனந்தி தலைமை தாங்கினார். 

போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின்போது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள், இந்து அமைப்புகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

 மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசின் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி கொண்டாட வேண்டும். இதற்கு இந்து அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து  கொண்டனர்.

Next Story