அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2021 11:31 PM IST (Updated: 1 Sept 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி, 
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இணைக்கும் சட்ட முன் வடிவு விற்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி காந்தி சிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனிய சாமி ஆலோசனையின்பேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, தலைமை கழக பேச்சாளர் ஜமால், நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலை யான், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாநில சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், போகலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜே. எஸ். கே. லோகி தாசன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். நகர் செயலாளர் கணேசன் வரவேற்றார். இதில் கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வீட்டு வசதி சங்க தலைவர் திசை நாதன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்பு சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தங்க வேல், பரமக்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், பொட்டி தட்டி ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட இலக்கிய அணி தலைவர் நகரம் நல்லதம்பி, நயினார் கோவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் தேத்தங்கால் பூமிநாதன் மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், மணிவாசகம், பரமக்குடி ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துக்குமார், வாணிய வல்லம் ஊராட்சி  தலைவர் நாகநாதன், போகலூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சேகர், பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் அய்யான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story