அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சாயல்குடி,
கடலாடி அருகே பூதங்குடி கிராமத்தில் நிறைகுளத்து அய்ய னார், வனப்பேச்சி அம்மன், காளியம்மன், ராக்காயி அம்மன், ஆஞ்சநேயர், மகாகணபதி, கருப்பணசாமி கோவில் களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக சாலை பூஜை, கோமாதா பூஜையுடன் சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க கோபுர கலசங்களுக்கு பூஜையுடன் புனிதநீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனி நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக அலங்காரங்கள் தீபாராதனை நடைபெற்றது. கிராமத்தின் சார்பில் பொது அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்தநிகழ்ச்சியில் பூதங்குடி யாதவ மகாசபை தலைவர் அய்யனார், தமிழ்நாடு கோவில் பூசாரிகள் பேரவை மண்டல தலைவர் சண்முகசுந்தரம், சண்முகவள்ளி, பரம்பரை பூசாரிகள் ராமமூர்த்தி, முருக நாதன் வில்வராஜ், கார்த்திக் கண்ணன், கபிலன் ரக்சன், ஹர்சவர்தன் உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story