மணல் கொள்ளையை தடுக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்
வாணியம்பாடி அருகே மணல் கொள்ளைைய தடுக்கக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு அரசு பஸ்சை சிறைப்பிடித்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மணல் கொள்ளைைய தடுக்கக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு அரசு பஸ்சை சிறைப்பிடித்தனர்.
மணல் கொள்ைள
தமிழக-ஆந்திர எல்லையிலும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வருகிறது.
வாணியம்பாடிைய அடுத்த அம்பலூர் அருகில் உள்ள கொடையாஞ்சி ஆற்றில் வரும் தண்ணீரை ஏரிவரத்துக் கால்வாயை சீரமைத்து, அங்குள்ள ஏரிக்கு தண்ணீரை திருப்பி விட கோரி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் செய்ய மறுத்ததால், விவசாயிகளே பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஏரி வரத்துக் கால்வாைய சீரமைத்து, தண்ணீரை ஏரிக்கு திருப்பி விட்டனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் கரைபோல் கட்டப்பட்டிருந்த மணலை, கொள்ளையர்கள் இரவில் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இதனால் மீண்டும் வரத்துக் கால்வாய் அனைத்தும் மூடப்பட்டது. ஏரிகளுக்கு தண்ணீர் போக முடியாத நிலை ஏற்பட்டது.
சிறைபிடித்தனர்
இதையறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மணல் கொள்ைளயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் எனக்கோரி மண்வெட்டி, கடப்பாரை ஆகியவற்றுடன் வந்து அம்பலூர் பாலாறு பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் மீது அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்ைச சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் வருவாய்த்துறையினர் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், பொதுமக்கள் சேர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். விவசாயிகள் சிலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வேனில் ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், மணல் கொள்ளை தடுக்கப்படும், ஏரிக்கால்வாய் நீர்வரத்து பாதுகாக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை ைகவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சிறைப்பிடித்த அரசு பஸ்சையும் விடுவித்தனர்.
Related Tags :
Next Story