ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிப்பூர தேரோட்ட விழாவிற்காக ஆழித்தேருக்கு தற்காலிக கூரை அமைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக ஆடிப்பூர தேரோட்டம் மாற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் இன்றி சிறு தேர்பவனி கோவில் பிரகாரத்திற்குள் நடைபெற்றது. இதையடுத்து ஆழித்தேரோட்டம் விழா அடுத்த ஆண்டு நடைபெறும் வரை மழை, வெயிலில் இருந்து தேரை பாதுகாக்க கண்ணாடி கூண்டு தாயார் செய்யப்பட்டுள்ளது.
கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரம்
இந்தநிலையில் ஆழித்தேரின் தற்காலிக கூரைகள் பிரிக்கப்பட்டு ராட்சத தூண்கள் கொண்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆழித்தேரை பாதுகாத்திட கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story