நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Sept 2021 12:29 AM IST (Updated: 2 Sept 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்:
56 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48 ஆயிரத்து 840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று பிற மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் அந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 839 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 895 ஆக அதிகரித்தது.
531 பேருக்கு சிகிச்சை
நேற்று 62 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 894 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 470 பேர் பலியான நிலையில், 531 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் சற்று அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story