தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ; 2 பெண்கள் படுகாயம்


தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ; 2 பெண்கள் படுகாயம்
x
தினத்தந்தி 2 Sept 2021 1:13 AM IST (Updated: 2 Sept 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாள்சாமிக்கு (வயது 63) சொந்தமான தீப்பெட்டி ஆலை ஒ.மேட்டுபட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எந்திரம் மூலம் தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று வழக்கம் போல் தீப்பெட்டி தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இதில் தீப்பெட்டிக்கு தேவையான தீக்குச்சிகள் காயவைக்கப்பட்டு, அதை எந்திரம் மூலம் மூடைகளில் எடுத்து வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது உராய்வு காரணமாக தீக்குச்சிகளில் தீப்பற்றியது. இதனால் தீ மளமளவென பரவி எரிய ஆரம்பித்தது.
உடனே தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீைய அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீ விபத்தில் சிக்கிய சத்திரபட்டியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 54) படுகாயமடைந்து, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பலத்த தீக்காயங்களுடன் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசுவரி (55) சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்தில் ஏராளமான தீக்குச்சிகள் மற்றும் தீ குச்சிகளை சலிக்கும் மூன்று எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.


Next Story