வாகனம் மோதி லங்கூர் குரங்கு பலி


வாகனம் மோதி லங்கூர் குரங்கு பலி
x
தினத்தந்தி 2 Sept 2021 1:17 AM IST (Updated: 2 Sept 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி லங்கூர் குரங்கு பலி

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் இருந்து மாவனல்லா செல்லும் சாலையோரம் நீலகிரியின் லங்கூர் இன குரங்கு உயிரிழந்த கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு இறந்தது தெரியவந்தது. பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் வரவழைக்கப்பட்டு, சுமார் 4 வயதான அந்த பெண் குரங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story