மாவட்ட செய்திகள்

முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு + "||" + Relocation

முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு

முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர்,

சிவகாசி மல்லாங்கிணறு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கரநாராயணன் நத்தம்பட்டிக்கும், திருத்தங்கல்லில் பணியாற்றும் சேரலாதன் சிவகாசிக்கும், மாவட்ட நில எடுப்பு பிரிவில் பணியாற்றும் உமா மகேஸ்வரி ஏழாயிரம்பண்ணைக்கும், ராஜபாளையத்தில் பணியாற்றும் அறிவழகன் ஆலங்குளத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சுழியில் பணியாற்றும் அழகர்சாமி ஏ.முக்குளத்திற்கும் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் மலர்விழி ராஜபாளையம் குறு வட்டத்திற்கும், திருச்சுழி சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பணியாற்றும் ஸ்டெல்லா தவமணி பந்தல்குடிக்கும், ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் தங்கபுஷ்பம் அயன்கொல்லங்கொண்டான் பகுதிக்கும், அருப்புக்கோட்டை தாலுகா பகுதியில் பணியாற்றும் ஆரோக்கிய பிரபாகரன் திருத்தங்கல்லுக்கும், சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் குருநாதன் படந்தால் பகுதிக்கும், வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ஜோதி பிள்ளையார்குளம் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

 கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் கபீர் மல்லாங்கிணறு பகுதிக்கும் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் நிர்மலா மங்கலம் பகுதிக்கும், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பரமசிவம் வத்திராயிருப்பு குறு வட்டத்திற்கும், விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ஜெயபிரகாஷ் விருதுநகர் குறுவட்டத்திற்கும், ராஜபாளையம் குறு வட்டத்தில் பணியாற்றும் அழகர்ராஜ் வத்திராயிருப்பு கோட்டையூர் குறு வட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் மாறுதல் தொடர்பாக எந்தவித கோரிக்கை மனுவோ விடுப்பு மனுவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்
அரை நிர்வாண வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
2. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம்
மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
4. 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
5. தாசில்தார்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.