பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மரியாதை


பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 1 Sep 2021 7:52 PM GMT (Updated: 2021-09-02T01:22:38+05:30)

நெல்லையில் பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

நெல்லை:
பூலித்தேவன் பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லையில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தி.மு.க. மத்திய மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், நெல்லை சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

நெல்லை மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூலித்தேவன் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பரமசிவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
த.ம.மு.க.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாளையங்கோட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்ட பூலித்தேவன் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, அகர தமிழர் கட்சி தமிழர் தேசிய முன்னணி மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அப்துல் சப்பார், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், புரட்சி பாரதம் மாவட்டசெயலாளர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பையில் ஆர்ச் அருகில் மாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அலங்கரிக்கப்பட்ட பூலித்தேவன் உருவப்படத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், நகர செயலாளர் பிரபாகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் அறிவழகன், தேவர் பேரவை நிர்வாகி பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story