கொத்தனாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு


கொத்தனாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 1 Sep 2021 8:07 PM GMT (Updated: 2021-09-02T01:37:17+05:30)

காரியாபட்டி அருகே கொத்தனாருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கொத்தனாருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு

 காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வ அதிபதி (வயது 23).இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது தாய்மாமன் அம்மையப்பன் என்பவர் கோவையில் கொத்தனார் வேலை பார்க்கும் பொழுது அதே கிராமத்தைச் சேர்ந்த கர்ணன்(21), லிங்கேஸ்வரன்(21) ஆகிய இருவரும் அம்மையப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக செல்வஅதிபதிக்கும், கர்ணன், லிங்கேஸ்வரன் ஆகியோருக்கும் இடையே நேற்று ஆவியூர் சமுதாயக்கூடம் அருகில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கர்ணன், லிங்கேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் செல்வ அதிபதியை சரமாரியாக வெட்டினர்.

2 பேர் கைது

இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறினார்.சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் செல்வ அதிபதியை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இது தொடர்பாக கர்ணன், லிங்கேஸ்வரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story