மகள்களை கிண்டல் செய்ததை கண்டித்த வன பாதுகாவலர் மீது தாக்குதல்
சிக்கமகளூருவில் மகள்களை கிண்டல் செய்ததை கண்டித்த வன பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்திய 8 வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சிக்கமகளூரு:
வன பாதுகாவலர்
சிக்கமகளூரு மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரீஷ். இவர் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினராகவும், வன பாதுகாவலராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவர் ஒரு ஜீப்பில் தனது மகள்கள் மற்றும் உறவினர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அவர் தரிகெரே தாலுகாவில் உள்ள சந்தவேரி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக அமர்ந்திருந்த சில வாலிபர்கள் ஜீப்பில் இருந்த கிரீஷின் மகள்களை பார்த்து கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிரீஷ், ஜீப்பை நிறுத்திவிட்டு அந்த வாலிபர்களிடம் என்று அவர்களை கண்டித்தார். பெண்களை இவ்வாறு கேலி, கிண்டல் செய்வது தவறானது என்று கண்டித்து அறிவுரை கூறினார். அதன் பின்னர் அங்கிருந்து கிரீஷ் புறப்பட்டு சென்றார்.
8 வாலிபர்களுக்கு வலைவீச்சு
இந்த நிலையில் தங்களை கண்டித்த கிரீசை பழிவாங்க நினைத்த அந்த வாலிபர்கள், அப்பகுதியைச் சேர்ந்த சிலரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்கள் சிக்கமகளூரு ஒசபேட்டை பகுதியில் கிரீசின் ஜீப்பை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கிரீசை சரமாரியாக தாக்கினர். அதை தடுக்க முயன்ற அவரது உறவினர்களையும் தாக்கி விட்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து கிரீஷ் சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச்சென்ற 8 வாலிபர்களையும் வலை வீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story