தாவணகெரேவுக்கு இன்று அமித்ஷா வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாவணகெரேவுக்கு வருகிறார். அவர் போலீஸ் பயிற்சி பள்ளியை திறந்து வைக்கிறார்.
சிக்கமகளூரு:
அமித்ஷா வருகை
தாவணகெரேவுக்கு இன்று(வியாழக்கிழமை) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிறார். அவர் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் தாவணகெரே மாவட்டத்திற்கு வருகிறார். அவர் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா அருகே ஜி.எம்.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.
அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் உணவு சாப்பிடும் அவர், காந்தி பவனுக்கு சென்று அதை திறந்து வைக்கிறார். பின்னர் கொண்டஜ்ஜி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பசப்பா நினைவு அருங்காட்சியத்திற்கு செல்கிறார்.
போலீஸ் பயிற்சி பள்ளி
அங்கு பசப்பாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார் அதையடுத்து அவர் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள போலீஸ் பயிற்சி பள்ளியை திறந்து வைக்கிறார். அதையடுத்து அவர் மீண்டும் தொழில்ந்டுப கல்லூரிக்கு வந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மத்திய நூலகத்தை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் அவர் தாவணகெரேவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உப்பள்ளிக்கு சென்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியின் மூத்த மகள் அர்பிதா-ஹ்ருஷிகேசின் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் மந்திரி அமித்ஷாவுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரி முருகேஷ் நிரானி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
துணை ராணுவத்தினர் குவிப்பு
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அமித்ஷாவின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தாவணகெரே மாவட்ட கலெக்டர் மகாந்தேஷ் கூறினார்.
Related Tags :
Next Story