குடோனில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்


குடோனில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்
x
தினத்தந்தி 2 Sept 2021 1:42 AM IST (Updated: 2 Sept 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கலில் குடோனில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி,

திருத்தங்கலில் குடோனில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவல்

திருத்தங்கல் சரஸ்வதி நகரில் பானுமதி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் குழாய் கம்பெனி நடத்த வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த நிலையில் குடோனில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சிவகாசி துணை சூப்பிரண்டு பாபுபிரசாந்த், சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் போலீசார் அந்த குடோனை அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

2 டன் ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்

பின்னர் இது குறித்து பறக்கும்படை தனிதாசில்தார் சங்கரபாண்டிய னுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வருவாய் ஆய்வாளர் விக் னேஷ்வரனுடன் சம்பவ இடத்துக்கு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மற்றும் கோதுமைகளை ஆய்வு செய்தார். பின்னர் அது கணக்கிடப்பட்டது. இதில் மொத்தம் 2 டன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ேரஷன் அரிசி மூடைகள் மற்றும் கோதுமை மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்துக்கு சொந்தமான குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பதுக்கல் தொடர்பாக ராமர், குருசாமி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story