அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பையா என்ற சின்ன சுப்பையா மகன்கள் ஆறுமுகம் (வயது 23), இசக்கிபாண்டி (21), அதே பகுதியை சேர்ந்த கந்தையா மகன் வானு என்ற வானுமாமலை (21). இதில் ஆறுமுகம் அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில், நாங்குநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இசக்கிபாண்டி மற்றும் வானுமாமலை ஆகியோர் அடிதடி கொலை முயற்சி, கொள்ளை ஆகிய வழக்குகளில் நாங்குநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று, ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை அந்தந்த சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story