விவசாயியை தாக்கிய 3 பேர் கைது


விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2021 1:50 AM IST (Updated: 2 Sept 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 68). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை (48) என்பவருக்கும் பாதைப் பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகாராஜனை சின்னதுரை, அவரது மனைவி அலமேலு (38), தாய் சின்னப்பிள்ளை (62) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் மகாராஜன் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சின்னத்துரை உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story